S-400 ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை – இரஷ்யா அறிவிப்பு

  • Tamil Defense
  • June 2, 2021
  • Comments Off on S-400 ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை – இரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுடனான எஸ்-400 ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என இரஷ்யா கூறியுள்ளது.பிரிக்ஸ் நாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பேசிய இரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்திய தலைவர்கள் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு பெறுவதில் உறுதியுடன் உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.சுமார்
$5.43 பில்லியன்கள் டாலர் செலவில் இந்தியா இந்த எஸ்-400 அமைப்புகளை இரஷ்யாவிடம் இருந்து பெற உள்ளது.ஐந்து வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா பெறும்.

இந்தியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.CAATSA மூலம் இந்தியா மீது தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா கூறி வருகிறது.