ஜம்மு காஷ்மீரின் சோபியானில் ரோந்து சென்ற வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உயிரிழப்பு குறித்த தகவல்கள் ஏதும் இல்லை.சைனாபோரா பகுதியில் உள்ள அக்லர் பகுதியில் ரோந்து சென்ற காவல் துறை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது தாக்குதல் நடத்தப்பட்ட இடம் முழுதும் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.