கிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன்

  • Tamil Defense
  • June 11, 2021
  • Comments Off on கிரிப்பன் விமானத்தை 100% தொழில்நுட்ப பறிமாற்றத்துடன் இந்தியாவிற்கு வழங்க தயாராக இருக்கும் ஸ்வீடன்

தற்போது இந்தியா தனது விமானப்படையில் உள்ள பழைய விமானங்களுக்கு மாற்றாக புதிய 114 விமானங்களை வாங்க முயற்சித்து வருகிறது.இதற்கு ஸ்வீடனின் சாப் நிறுவனம் தனது கிரிப்பன் இ விமானத்தை வழங்க முன்வந்தது.

அதை தற்போது மீண்டும் உறுதிப்படுத்தி பேசியுள்ள ஸ்வீடன் பாதுகாப்பு துறை அமைச்சர் பீட்டர் ஹால்ட்விஸ்ட் அவர்கள் விமானத்தை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் 100% தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் இந்த Gripen E விமானங்களை இந்தியாவிற்கு வழங்க தயாராக உள்ளதாக சாப் நிறுவனம் கூறியுள்ளது.கிரிப்பன் தவிர்த்து பிரான்சின் ரபேல், இரஷ்யாவின் மிக்-35 மற்றும் சுகாய்-35 மற்றும் யுரோபைட்டர் டைபூன் ஆகிய விமானங்களும் போட்டியில் உள்ளன.