இங்கிலாந்து போர்க்கப்பலை மிரட்ட குண்டுவீசிய இரஷ்ய போர்விமானம்
1 min read

இங்கிலாந்து போர்க்கப்பலை மிரட்ட குண்டுவீசிய இரஷ்ய போர்விமானம்

கருங்கடல் பகுதியில் இரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக இங்கிலாந்தின் HMS Defender போர்க்கப்பலுக்கு அருகே இரஷ்யாவின் Su-24 போர்விமானம் குண்டுவீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கருங்கடலின் பியோலென்ட் முனை அருகே இரஷ்யாவின் கருங்கடல் கப்பல் பிரிவு மற்றும் இரஷ்யாவின் FSB எல்லை காவல் பிரிவு ஆகியவை இணைந்து இந்த சம்பவத்தை தடுத்துள்ளதாக இரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.இங்கிலாந்தின் டெஸ்ட்ராயர் ரக கப்பலான எச்எம்எஸ் டிபன்டர் கப்பல் இரஷ்ய எல்லைக்குள் நுழைந்ததாக இரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

ஜீன் 23 காலை 11:52 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இரஷ்ய எல்லைக்குள் 3கிமீ வரை இங்கிலாந்தின் போர்க்கப்பல் நுழைந்ததாக இரஷ்யா கூறியுள்ளது.

Su-24

12.06 மணி அளவில் இரஷ்யாவின் ரோந்து கப்பல் துப்பாக்கியால் சூட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன் பிறகு 12:19 மணி அளவில் Su-24M விமானம் போர்க்கப்பலுக்கு அருகே குண்டுகளை வீசியுள்ளது.

ஆனால் எந்த குண்டுகளும் வீசப்படவில்லை என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு உக்ரேனின் கடற்பகுதியில் தான் பயணம் செய்ததாக இங்கிலாந்து கூறியுள்ளது.