இலங்கை மீனவர்களை தாக்கியதா இந்திய கடற்படை ? இலங்கை குற்றச்சாட்டு !
1 min read

இலங்கை மீனவர்களை தாக்கியதா இந்திய கடற்படை ? இலங்கை குற்றச்சாட்டு !

இலங்கையை சேர்ந்த மீனவர் குழு ஒன்றை இந்திய கடற்படை தாக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆனால் இந்திய கடற்படை இந்த சம்பவத்தை மறுத்துள்ளது.

ஜீன் நான்கு அன்று டியாகோ கார்சியா சர்வதேச எல்லைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக ஊடகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.13 மீனவர்கள் சேர்ந்த குழு தாக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ஆனால் இந்த சம்பவத்தை இலங்கைக்கான இந்தியத் தூதர் மறுத்துள்ளார்.அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என தூதர் கூறியுள்ளார்.