Breaking News

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் அணு ஆயுதங்கள் ஸ்வீடன் அமைப்பு அறிக்கை !!

  • Tamil Defense
  • June 17, 2021
  • Comments Off on இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வரும் அணு ஆயுதங்கள் ஸ்வீடன் அமைப்பு அறிக்கை !!

இந்தியா சீனி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தங்களது அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்களின் அறிக்கைப்படி கடந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவிடம் 150 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும் தற்போது அது 156 ஆக உள்ளது எனவும் ஒரு வருட காலத்தில் 6 அணு ஆயுதங்கள் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதை போல பாகிஸ்தான் கடந்த வருடம் 160 அணு ஆயுதங்களை வைத்திருந்த நிலையில் தற்போது அதனை 165 ஆக அதிகரித்துள்ளது, சீனாவும் கடந்த வருடம் 320 அணு ஆயுதங்களை வைத்திருந்த நிலையில் தற்போது ஒரேடியாக 30 அணு ஆயுதங்களை படையில் இணைத்துள்ளது அதாவது 350 அணு ஆயுதங்கள் சீனாவிடம் உள்ளது.

ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி அமைப்பின் ஹான்ஸ் க்ரிஸ்டென்ஸன் பேசும் போது சர்வதேச அளவில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாகும் இது பனிப்போருக்கு பின்னர் மற்றொரு மிக முக்கிய பரினாமம் என கூறினார.

மேலும் அந்த அமைப்பின் அறிக்கையில் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானதாக பார்க்கப்படுகிறது காரணம் உலகில் வேறேங்குமே அடுத்தடுத்த 3 அணு ஆயுத நாடுகள் எல்லையை பகிர்வதை காண முடியாது,

அதிலும் இந்தியா மீது சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சுமார் 5 முறை போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது, அத்தகைய நிலை நல்லதல்ல என்பதை மறுக்க முடியாது ஆனால் இதில் மிக முக்கியபாக பார்க்கப்பட வேண்டியது இந்த மூன்று நாடுகளுமே அணு அயுதங்களை செயல்பாட்டில் வைக்கவில்லை என்பது தான்.

அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனா, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய 9 நாடுகள் ஒட்டுமொத்தமாக 13 ஆயிரத்திற்கும் அதிகமான அணு ஆயுதங்களை வைத்துள்ளன.

அவற்றில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா மட்டுமே சுமார் 90% அளவுக்கு அணு ஆயுதங்களை வைத்துள்ளன, ஆனால் இரண்டு நாடுகளுமே அணு ஆயுதங்களை குறைத்து வருவதும் அதே நேரத்தில், எப்போதும் தயாராக செயல்பாட்டில் உள்ள அணு ஆயுதங்களை அதிகரித்து வருவதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.

இங்கிலாந்தும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் 10 அணு ஆயுதங்களை அதிகரித்து உள்ளது அதாவது 215ல் இருந்து 225 ஆக உள்ளது, வட கொரியாவும் 10 அணு ஆயுதங்களை அதிகரித்து உள்ளது. தற்போது 40-50 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் 13,400 ஆக இருந்த எண்ணிக்கை இந்த வருடம் 13,080 ஆக குறைந்துள்ளது இதற்கு காரணம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அதே நேரத்தில் இங்கிலாந்து சீனா பாகிஸ்தான் இந்தியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் அதிகரித்து வருகின்றன.