மிசோரம் மாநிலத்தில் 2 நாட்களுக்கு முன்னர் ராணுவத்தினருக்கு ஆயுத பதுக்கல் பற்றிய ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது சுமார் 1300 கிலோ வெடி பொருள், 2000 ஃபியூஸ்கள், 925 மின்னனு டெட்டனேட்டர்கள் மற்றும் 3000 சிறப்பு டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கபட்டன.
இவை அனைத்தையும் பறிமுதல் செய்த ராணுவ வீரர்கள் சம்பவ இடத்தில் இந்த பதுக்கலுடன் தொடர்புடைய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் மீது தற்போது காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.