பாதுகாப்பு படைகள் மீதான தாக்குதலுக்கு லஷ்கர் இயக்கம் பொறுப்பேற்பு

சனி அன்று பாதுகாப்பு படைகளின் மீதான தாக்குதலுக்கு லஷ்கர் பயங்கவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலில் இரு காவல் துறை வீரர்களும் இரு பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.

வீரர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பேசிய காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங அவர்கள் இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என கூறியுள்ளார்.

சேபோரில் இருந்த காவல் துறை வீரர்கள் கொரானா தடுப்பு பணிகளில் இருந்த போது இந்த தாக்குதலை லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடந்த போதே காவல் துறை வீரர்கள் திருப்பி தாக்கியுள்ளனர்.இதில் நான்கு காவல் துறை வீரர்கள் மற்றும் மூன்று பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர்.

கான்ஸ்டபிள் வசீம் மற்றும் சௌகத் ஆகிய இரு வீரர்களும் குண்டு காயம் அடைந்து வீரமரணம் அடைந்துள்ளனர்.

மற்ற இரு வீரர்களின் உடல்நிலையும் தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.