சிக்கிமில் இருந்து இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி !!

  • Tamil Defense
  • June 25, 2021
  • Comments Off on சிக்கிமில் இருந்து இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி !!

நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் இருந்து இரண்டாவது பெண் ராணுவ அதிகாரி ஒருவர் நாட்டிற்கு சேவையாற்றி வருகிறார்.

மருத்துவர். தீப்ஷிகா சேத்ரி இந்திய தரைப்படையில் கேப்டன் அந்தஸ்து கொண்ட மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை டிஷி நம்கயால், புனித ஜோசப் மற்றும் பிர்லா பலிகா வித்யாபித் ஆகிய பள்ளிகளில் முடித்தார்.

பின்னர் அவர் சிக்கிம் மனிப்பால் மருத்துவ அறிவியல் மையத்தில் மருத்துவம் பயின்றுவிட்டு ராணுவத்தில் அதிகாரியாக இணைந்தார்.

திரு. ராஜேந்திர குமார் சேத்ரி, தாயார் திருமதி. பிந்து சேத்ரி ஆகியோர் இவரது பெற்றோர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி ஆகும்.