டிசம்பரில் இந்தியா வரும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு

  • Tamil Defense
  • June 26, 2021
  • Comments Off on டிசம்பரில் இந்தியா வரும் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு

இந்த வருட டிசம்பரில் முதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிழக்கு லடாக் உள்ளிட்ட உயர்மலைப்பகுதிகளில் கூட இந்த அமைப்பு பாதுகாப்பு வழங்கும்.

கடல்மட்டத்தில் இருந்து 3000அடி உயரத்தில் கூட இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சிறப்பாக செயல்படக்கூடியது என இரஷ்ய நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த S-400 அமைப்பு லடாக் போன்ற உயர்மலைப் பகுதிகளின் வான் பகுதியை பாதுகாக்கும்.மேலும் இது நம்படைகளுக்கு பலத்தை அளிக்கும்.

கடந்த வருட கல்வான் மோதலுக்கு பிறகு இரு நாட்டு படைகளும் எல்லைகளில் துருப்புகளை அதிக அளவு நிறுத்தியுள்ளன.இந்த அமைப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள எஸ்-400 அமைப்பு தயாரிப்பாளரான Almaz Central Design Bureau நிறுவனத்தின் துணை ஜெனரல் டிரேக்டர் மிகைல் போட்வியஸ்நிகோவ் அவர்கள் 3000 அடி உயரத்திலும் எதிரியின் ஏவுகணை மற்றும் மற்ற வான் இலக்குகளை இந்த அமைப்பு வானிலேயே தாக்கி அளிக்கும் என கூறியுள்ளார்.

மாஸ்கோ நகரத்தை பாதுகாக்க இரஷ்ய இந்த அமைப்பை தான் உபயோகிக்கிறது.மேலும் சிரியாவில் இரஷ்யாவின் தளங்களை பாதுகாக்கவும் இந்த அமைப்பை உபயோகித்தது.கிரிமியாவிலும் இந்த அமைப்பை தான் இரஷ்யா நிறுத்தியுள்ளது.

சீனாவிற்கும் இந்த அமைப்புகளை இரஷ்யா விற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.