நேட்டோவை எதிர்கொள்ள 20 புதிய படையணிகளை உருவாக்க ரஷ்யா முடிவு !!

  • Tamil Defense
  • June 2, 2021
  • Comments Off on நேட்டோவை எதிர்கொள்ள 20 புதிய படையணிகளை உருவாக்க ரஷ்யா முடிவு !!

ரஷ்யாவின் மேற்கு எல்லையோரம் நேட்டோவை எதிர்கொள்ள 20 புதிய படையணிகளை உருவாக்க உள்ளதாக மூத்த ராணுவ அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷோய்கு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசும் போது சமீப காலங்களில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் நேட்டோ கடற்படை கப்பல்கள் ரஷ்ய எல்லைகளை அவ்வப்போது மிகவும் நெருங்கி வருவதாகவும்,

இத்தகைய செயல்பாடுகள் சர்வதேச சமுகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் ஆகவே ரஷ்ய இறையாண்மையை பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

அதை போல இந்த வருடத்தில் இதுவரை மட்டுமே மேற்கு எல்லையோரம் உள்ள ரஷ்ய படைகள் சுமார் 2000 புதிய ராணுவ தளவாடங்களை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் உக்ரைனுடைய க்ரைமியா விவகாரம் முதல் ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான மோதல்போக்கு துவங்கி அதிகரித்து வருவதும்

கடந்த மாதம் உக்ரைன் எல்லையோரம் ரஷ்யா பல லட்சம் துருப்புக்கள் மற்றும் தளவாடங்களை குவித்த நிலையில் தீவிர சர்வதேச நெருக்கடி காரணமாக பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.