
ரஷ்யா ஈரானுக்கு மத்திய கிழக்கில் உள்ள ராணுவ இலக்குகளை கண்காணிக்க உதவும் வகையிலான ஒரு அதிநவீன செயற்கைகோளை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது மிகவும் சக்தி வாய்ந்த கேமராவை கொண்ட ரஷ்யா தயாரித்த கனோபஸ்-5 எனும் செயற்கைகோள் ஈரானுக்கு வழங்கப்படும் எனவும் இது பொது பயன்பாட்டுக்கானது எனவும் கூறப்படுகிறது.
இந்த கனோபஸ்-5 ரக செயற்கைகோள் மூலமாக பெர்சிய வளைகுடாவில் உள்ள எண்ணெய் கிணறுகள் முதல் இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் வரை ஈரானால் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இதனை பெற பல ஆண்டுகளாக ஈரான் மிகவும் கடுமையாக முயற்சித்தது குறிப்பிடதகுந்த விஷயம் ஆகும்.
இந்த தகவல்கள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய இருவரும் ஜெனிவாவில் சந்திக்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ஈரானுடன் 2015ஆம் ஆண்டு கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.