
இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் நீர்மூழ்கியை நீண்ட நேரத்திற்கு நீருக்குள்ளேயே வைத்திருக்க உதவும் தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க தயாராக இருப்பதாக இரஷ்யா கூறியுள்ளது.
தற்போது இந்தியா P 75I திட்டத்தின் கீழ் ஆறு நீர்மூழ்கிகளை கட்ட உள்ளது.இதற்காக டென்டர் விடப்பட உள்ள நிலையில் இதற்கு இரஷ்யா,ஜெர்மனி,ஸ்பெயின் மற்றும் தென்கொரியா ஆகியவை தனது நீர்மூழ்கிகளை வழங்க தயாராக உள்ளன.
ஒரு நீர்மூழ்கி நீருக்குள்ளேயே நீடித்திருக்க உதவும் தொழில்நுட்பம் தான் Air Independent Propulsion (AIP).ஏஐபி தொழில்நுட்பம் இல்லாத நீர்மூழ்கி அடிக்கடி நீருக்குள் வெளியே வரவேண்டும்.அதன் மூலம் கிடைக்கும் ஆக்சிஜன் உதவியுடன் தான் எரிபொருளை நீர்மூழ்கி எரிக்க வேண்டும்.
இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனமும் பியூவன் செல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட AIP-ஐ மேம்படுத்தி வருகிறது.
இந்தியா பெற உள்ள ஆறு நீர்மூழ்கிகளும் சுமார் 43000 கோடிகள் செலவில் பெறப்பட உள்ளது.இவை இந்தியாவில் தொழில்நுட்ப பரிமாற்றம் பெறப்பட்டு கட்டப்படும்.