சீனாவுக்கு எதிராக ஹசிமாரா தளத்தில் ரபேல் விமானங்களை களமிறக்க உள்ள விமானப்படை

  • Tamil Defense
  • June 22, 2021
  • Comments Off on சீனாவுக்கு எதிராக ஹசிமாரா தளத்தில் ரபேல் விமானங்களை களமிறக்க உள்ள விமானப்படை

இந்திய விமானப்படை இரண்டாவது ரபேல் ஸ்குவாட்ரானை தற்போது ஏற்படுத்தியுள்ளது. 101 ‘Falcons of Chhamb and Akhnoor’ எனும் பெயரில் அம்பாலாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இது விரைவில் கிழக்கு முனைக்கு மாற்றப்பட உள்ளது.அதாவது மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா விமானப்படை தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

முழு பலத்துடன் அதாவது 18 ரபேல் விமானத்துடன் முதல் ஸ்குவாட்ரான் ஆன 17 கோல்டன் ஏரோஸ் ஏற்கனவே அம்பாலா தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.தற்போது ஐந்து விமானங்களுடன் இரண்டாவது ஸ்குவாட்ரான் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 13 விமானங்களும் அடுத்த வருட ஏப்ரலுக்குள் இந்தியா வர உள்ளது.இத்துடன் இரண்டாவது ஸ்குவாட்ரான் முழுமை பெறும்.இந்தியா மொத்தமாக 36 ரபேல் விமானங்களை ஆர்டர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

17 கோல்டன் ஏரோஸ் ஸ்குவாட்ரானுக்கு க்ரூப் கேப்டன் ரோகித் கத்தாரியா அவர்கும் 101 வது ஸ்குவாட்ரானுக்கு க்ரூப் கேப்டன் நீரஜ் ஜம்ப் அவர்களும் கட்டளை அதிகாரிகளாக நியமிக்கபட்டுள்ளனர்.ஹசிமாரா மற்றும் அம்பாலா தளங்கள் ரபேல் விமானங்களின் மெயின் தளங்களாக இருந்தாலும் தேவை எனும் போது ரபேல் விமானங்களை இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் இயக்க முடியும்.

ரபேல் விமானங்களுக்கான பராமரிப்பு ஏற்பாடுகள், ஷெல்டர்கள் மற்றும் ஹேங்கர்கள் இரு தளங்களிலுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஹசிமாரா தளம் சிக்கிம்-பூடான்-திபத் சந்திப்புக்கு மிக அருகே அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெறுகிறது.

தேஜ்பூர் மற்றும் ஜாபுவா தளங்களில் ஏற்கனவே சுகாய் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் ரபேல் விமானங்களின் வரவு கிழக்கு செக்டாருக்கு புது தெம்பை அளிக்கும்.