
காஷ்மீரில் காவல்துறை வீரர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஷ்மீர் காவல்துறையே சேர்ந்த வீரர் ஆய்வாளர் பெர்வைஸ் அகமது தார் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
நௌகமின் கனிபோரா பகுதியில் தொழுகை முடித்து 8.30 மணி அளவில் வீடு திரும்பியவரை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த கொடும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத குழுவான லஷ்கரின் சகீன் அனஸ் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.