எல்லை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி மீது பாக் படையினர் தாக்குதல் !!

  • Tamil Defense
  • June 3, 2021
  • Comments Off on எல்லை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி மீது பாக் படையினர் தாக்குதல் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அர்னியா செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு அருகே வளர்ந்திருக்கும் புதர்களை அகற்றி சீரமைக்கும் பணி கடந்த 2ஆம் தேதி நடைபெற்று வந்தது.

அப்போது இந்த பணியில் ஈடுபட்டிருந்த குண்டு துளைக்காத ஜே.சி.பி மீது பாகிஸ்தான் ரேஞ்சர்கள் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் பதிலுக்கு திரும்ப தாக்குதல் நடத்தினர், அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு கடந்த மே மாதம் 2ஆம் தேதி முதல்முறையாக பாக் வீரர்கள் ராம்கர் செக்டாரில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.