BREAKING பாக் ராணுவ தளபதியை பாக் ராணுவத்தினரே கொல்லவிருந்த திட்டம் முறியடிப்பு உயரதிகாரிகள் உட்பட 66 ராணுவத்தினர் கைது !!
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுற்றுபயணத்தின் போது கொல்ல மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தது.
அதனை எப்படியோ மோப்பம் பிடித்த பாகிஸ்தான் உளவு அமைப்புகள் இந்த திட்டத்தை முறியடித்து திட்டம் தீட்டிய அனைவரையும் கைது செய்ய பாதுகாப்பு படைகளுக்கு உதவியுள்ளன.
இதில் 14 ராணுவ அதிகாரிகள், 22 SSG சிறப்பு படை வீரர்கள் மற்றும் 30 இதர ராணுவ வீரர்கள் ஆகியோர் என மொத்தமாக சுமார் 66 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமுக ஆர்வலர் டாக்டர் அம்ஜத் அயூப் மிர்சா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 4 மேஜர் ஜெனரல் , 2 ப்ரிகேடியர் போன்ற அந்தஸ்து வகிக்கும் உயர் அதிகாரிகள் வரை சிக்கியுள்ளனர் என்பது தான்.
இவர்களை தவிர 3 கர்னல்கள், 3 லெஃப்டினன்ட் கர்னல்கள் மற்றும் 4 மேஜர் அந்தஸ்திலான அதிகாரிகளும் இதில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.