
ஆப்கனின் தேசிய பாதுகாப்பு படை எனும் உளவுப் பிரிவால் பாக் இராணுவத்தில் பணிபுரியும் இராணுவ அதிகாரி அசிம் அக்தர் என்பவன் தாலிபன்களுடன் பிடிபட்டுள்ளான்.
ஆப்கனின் பக்திகா மகாணத்தில் பாக் அதிகாரியை ஆப்கன் உளவு படைவீரர்கள் கைது செய்துள்ளார்கள்.தாலிபன்களுடன் இணைந்து சண்டையிட பாக் இராணுவம் அவரை அனுப்பியுள்ளதாக நடந்த விசாரணையில் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிற்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதிலும் இவன் ஈடுபட்டதாக ஆப்கன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறியுள்ளான்.
வெளியான தகவல்படி இவனுடன் இன்னும் நிறைய பாக் இராணுடத்தினர் தாலிபன்களுடன் இணைந்து சண்டையிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.