
ஜம்மு காஷ்மீரின் சோபியானில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ஆபரேசன் சிர்மால் எனும் பெயரில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில் நேற்று மதியம் இந்த சண்டை தொடங்கியது.
குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த இராணுவம் மற்றும் காஷ்மீர் காவல் துறை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.