அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் களமாகும் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் !!

  • Tamil Defense
  • June 13, 2021
  • Comments Off on அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் களமாகும் இந்தோ பசிஃபிக் பிராந்தியம் !!

இந்தோ பசிஃபிக் பிராந்தியம் பல்வேறு நாடுகளின் அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் முன்னனி களமாக உருமாறி வருகிறது என ஒரு ஆய்வு கட்டுரை கூறுகிறது.

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வல்லரசு போட்டியில் இருதரப்பின் கடற்படைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகள் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் குறிப்பாக தற்போது படையில் உள்ள ஒஹையோ ரக நீர்மூழ்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்த ஒஹையோ ரக நீர்மூழ்கிகள் அமெரிக்க கடற்படையின் மிக சிறந்த தளவாடங்களில் ஒன்றாகும், உலகின் எந்த பகுதிக்கும் ரகசியமாக சென்று இயங்குவும் தேவைபட்டால் அணு ஆயுத தாக்குதல் நடத்தி பலத்த சேதமும் விளைவிக்ககூடும்.

அதே நேரத்தில் சீனாவும் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, அந்நாட்டின் ஜின் மற்றும் சமீபத்திய அதிநவீன டைப்094 ரக நீர்மூழ்கிகள் இதற்காக பணிக்கப்பட்டு உள்ளன.

ஆனால் இந்த சீன நீர்மூழ்கிகள் தென சீன கடலை தாண்டி பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் வெற்றிகரமாக இயங்குவது மிக கடினம் காரணம் அங்கு அமெரிக்க கடற்படையின் ஆதிக்கம் வலுவாக உள்ளது, பி8ஏ விமானங்கள் மற்றும் நாசகாரி கப்பல்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

இந்த இரண்டு நாடுகளை தவிர இந்திய கடற்படையும் கோதாவில் இறங்கியுள்ளது, தனது கணக்கை அரிஹந்த் ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகள் மூலமாக தொடங்கிய இந்தியா விரைவில் அரிகாட் நீர்மூழ்கியை படையில் இணைக்க உள்ளது.

இது தவிர மேலும் இரண்டு அதாவது 7000 டன்கள் எடை கொண்ட S4 மற்றும் S4* ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளை கட்டி வருகிறது.

அடுத்ததாக பிரமாண்டமான S5 ரக அணுசக்தி அணு ஆயுத நீர்மூழ்கிகளை கட்டி படையில் இணைக்க திட்டமிட்டு உள்ளது இவை அமெரிக்க வெர்ஜீனியா ரக நீர்மூழ்கிகளுக்கு சமமான அளவில் அதிநவீனமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக பாகிஸ்தான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இஸ்ரேலை போல தங்களது டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளில் அணு ஆயுத ஏவுகணைகளை இணைத்து பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளன.

இதில் அமெரிக்கா தற்போது முன்னனியில் உள்ளது, அடுத்தபடியாக சீனாவும் மூன்றாவதாக இந்தியாவும் உள்ளன, இந்தியா S5 ரக நீர்மூழ்கிகளை படையில் இணைக்கும் போது உலகின் வலுவான சக்திகளில் ஒன்றாக உருமாற்றம் அடையும்.

ஆனால் அணுசக்தி நீர்மூழ்கிகளை கட்டி பராமரித்து இயக்குவது என்பது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் ஆகும் அதனால் தான் அமெரிக்கா, ரஷ்யா , சீனா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் மற்றும் இந்தியா 6 நாடுகள் மட்டுமே இந்த திறனை கொண்டுள்ளன.

தற்போது பிரேசில் கடற்படையும் ஒரு அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பலை கட்டி படையில் இணைத்து இந்த எலைட் கிளப்பில் இணைய விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.