
இந்தியாவுடனான எல்லை மோதலுக்கு பிறகு இந்திய இராணுவத்தில் தற்போது உள்ள லடாக்கி மற்றும் திபத்திய வீரர்களுக்கு முன்னால் சீன வீரர்கள் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதை சீனா நன்கு உணர்ந்துவிட்டது.
சீனாவின் தொலைதூர பிரிவில் இருந்து சீன இராணுவத்தில் இணைந்த வீரர்களால் லடாக் போன்ற உயரமான இடங்களில் தாக்குபிடிக்க முடியவில்லை.மே 2020 முதல் இந்த மோதல் தொடர்ந்தே வருகிறது.செப்டம்பர் முதல் வாரத்தில் இந்திய இராணுவம் கைலாஷ் மலைப்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய போது சீனா தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளதாக தெரிகிறது.
திபத்தை சீனா கைப்பற்றி 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திபத்தியர்களை சீனா தனது படையில் இணைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.சிறப்பு திபத்திய இராணுவப் பிரிவு எனும் பெயரில் புதிய படை தோற்றுவிக்கப்பட்டு அந்த படை தற்போது சிக்கிம்-பூடான் அருகே உள்ள சும்பி பகுதிகளில் நிலைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.