ராணுவ செயற்கைகோள் திட்டங்களை விரைவுபடுத்தும் இந்தியா !!

  • Tamil Defense
  • June 5, 2021
  • Comments Off on ராணுவ செயற்கைகோள் திட்டங்களை விரைவுபடுத்தும் இந்தியா !!

ராணுவ செயற்கைகோள்கள் மூலமாக நமது உளவு கண்காணிப்பு வேவு பார்த்தல் போன்றவை பன்மடங்கு வலுப்படும், இந்த வசதிகள் தற்போது நமது ராணுவத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும் அதுவும் குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லை பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்திய அரசு பல ராணுவ செயற்கைகோள்களை கட்டமைத்து பயன்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளது, தற்போது இந்தியா 15 ராணுவ செயற்கைகோள்களை பயன்படுத்தி வருகிறது, கடைசியாக விமானப்படைக்கு பிரத்யேகமாக ஏவப்பட்ட GSAT-7A தரைப்படையாலும் பயன்படுத்தி வரப்படுகிறது.

வரும் 2022ஆம் ஆண்டு கடற்படைக்கென பிரத்தியேகமாக ஏவப்படும் GSAT-7R எட்டு வருடங்களுக்கு முன்னர் ஏவப்பட்ட GSAT- 7 RUKMINI செயற்கைகோளுக்கு மாற்றாக அமையும், இந்த செயற்கைகோளானது இஸ்ரோ ஏவிய 7 நான்காம் தலைமுறை செயற்கைகோள்களில் கடைசியானதாகும் இவை சுமார் 2000 நாடிக்கல் மைல் இயக்கவரம்பு கொண்டதாகும்.

இந்த புதிய GSAT-7R செயற்கைகோளானது புதிய தகவல் பரிமாற்ற கருவிகளை கொண்டிருக்கும் எனவும் “Ka” மற்றும் “V” அலைவரிசைகளை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதபற்றி முன்னாள் இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் டி கே ஷர்மா பேசும்போது இந்த செயற்கைகோள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாதது ஆகும், நாம் பல ஆயிரக்கணக்கான சீன கப்பல்களை கண்காணிக்க வேண்டியுள்ளது என சமீபத்தில் நடைபெற்ற விட்சுன் ரீஃப் பிரச்சினையை சுட்டி காட்டினார்.

ராணுவ விண்வெளி அமைப்புகள் தற்காப்பு மற்றும் தாக்குதல் சார்ந்தவையாக இருக்க வேண்டும், தாக்க வரும் ஏவுகணைகள் எதிரி படை நகர்வுகளை கண்காணிக்கும் அதே நேரத்தில் உளவு பாரக்கும் செயற்கைகோள்கள் போன்றவற்றை அழிக்கும் திறனும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.