
இந்திய இராணுவம் தாக்குவதற்கென்றே புதிய ஒருங்கிணைந்த தாக்கும் குழுக்களை உருவாக்க உள்ளது.சண்டை நேருமானால் இந்த பிரிவுகளை வேகமாக நகர்ந்து எதிரிகளை அதிரடியாக தாக்கும்.ஏற்கனவே ஒருங்கிணைந்த தாக்கும் குழுவை ஏற்படுத்த இந்திய இராணுவம் முயற்சித்த நேரத்தில் கொரானா காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.
5000 வீரர்களுடன் அவர்களுக்கு தேவையான ஆர்டில்லரி, இன்பாட்ரி வீரர்கள் கலவையாக , டேங்குகள், வான் பாதுகாப்பு அமைப்புகள்,சிக்னல்ஸ், என்ஜினியர்ஸ் மற்றும் சில குழுக்களுடன் இந்த ஒருங்கிணைந்த குழு நிரந்தரமாக உருவாக்கப்படும்.
2022 வாக்கில இந்த குழு உருவாக்கப்படும்.
எதிர்கால சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெறும் நோக்கில் இந்த குழு ஏற்படுத்தப்படும்.இரு முனை அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் மொத்தமாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த படைக்குழு ஏற்கனவே போர்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளன.தற்போது முதல் முறையாக 8 முதல் 10 ஒருங்கிணைந்த குழு ஏற்படுத்தப்பட உள்ளது.9வது கோர், பனாகரில் உள்ள 17வது கோர் மற்றும் சுக்னாவில் உள்ள 33வது கோர் படைப்பிரிவுகளில் இருந்து இந்த குழுக்கள் உருவாக்கப்படும்.இந்த குழுவிற்கு மேஜர் ஜெனரல் அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார்.
இந்த ஒருங்கிணைந்த குழு பிரிகேடை விட பெரிதாக அமையும்.டிவிசனை விட குறைந்த அளவிலான வீரர்களை கொண்டிருக்கும்.8-10 குழு உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்த பிறகு மேலதிக குழுக்கள் உருவாக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிராக உருவாக்கப்படும் குழுவில் அதிகமாக டேங்குகள் மற்றும் கனரக ஆர்டில்லரிகள் இடம்பெறும்.சீனாவிற்கு எதிராக உருவாக்கப்படும் குழுவில் இலகுரக ஆர்டில்லரிகள் மற்றும் அதிக இன்பான்ட்ரி வீரர்கள் இருப்பர்.