ப்ரடேட்டர் ஆளில்லா ட்ரோன் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகிய கடற்படை !!

  • Tamil Defense
  • June 5, 2021
  • Comments Off on ப்ரடேட்டர் ஆளில்லா ட்ரோன் வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகிய கடற்படை !!

இந்திய கடற்படை 30 ப்ரடேட்டர் ஆயுதம் ஆளில்லா விமானங்களை முப்படைகளுக்கும் வாங்க அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சகத்தை அணுகியுள்ளது. இந்த எம்.க்யூ-9 ப்ரடேட்டர் (MQ-9 PREDATOR) ட்ரோன்களை இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைக்கும் சேர்த்து வாங்க இந்திய கடற்படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய கடற்படை இதற்காக பாதுகாப்பு கொள்முதல் வாரியத்தை கூட்டுமாறும் அங்கு அனுமதி கிடைத்தவுடன் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின அனுமதியை இந்திய கடற்படை கோரும் என கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் அமெரிக்க வெளிநாட்டு ராணுவ விற்பனை திட்டத்தின்கீழ் நடைபெறும் எனவும் மேலும் இது இருநாட்டு அரசுகளுக்கு இடையே நேரடியாக நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ப்ரடேட்டர் ட்ரோன்கள் ஹெல்ஃபயர் மற்றும் வழிகாட்டபட்ட குண்டுகளை சுமக்கும் மேலும் முப்படைகளுக்கும் தலா 10 ட்ரோன்கள் வீதம் மொத்தமாக 30 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.