சாதனை படைத்துள்ள அமெரிக்கா; ஆளில்லா விமானம் மூலம் வானிலேயே எரிபொருள் நிரப்பி சாதனை

  • Tamil Defense
  • June 8, 2021
  • Comments Off on சாதனை படைத்துள்ள அமெரிக்கா; ஆளில்லா விமானம் மூலம் வானிலேயே எரிபொருள் நிரப்பி சாதனை

போயிங்கின் MQ-25 ஆளில்லா விமானம் ஒரு போர்விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியுள்ளது.ஒரு ட்ரோன் இதுபோல வானிலேயே எரிபொருள் நிரப்புவது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு தான்
MQ-25 ஸ்டிங்ரே எனப்படும் ஏரியல் டேங்கர் ட்ரோன் ஆகும்.
இந்த ட்ரோன் அமெரிக்க கடற்படையின் F/A-18 சூப்பர் ஹார்னெட் விமானத்திற்கு வானிலேயே எரிபொருள் நிரப்பியுள்ளது.

வானிலேயே எரிபொருள் நிரப்புவது என்பதே மிகவும் கடினமான பணி ஆகும்.உலகின் முன்னனி விமானப்படைகள் அனைத்தும் இந்து போன்ற பயிற்சிகளை அடிக்கடி செய்து பார்ப்பது வழக்கம்.

ஆனால் ட்ரோன் மூலம் எரிபொருள் நிரப்புவது இதுவே முதல் முறை.