
நமது நாட்டில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து திறனை அதிகப்படுத்தும் நோக்கில் பிரத்தியேக சரக்கு போக்குவரத்து பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பிரத்தியேக சரக்கு போக்குவரத்து பாதையில் நேற்று தரைப்படை டாங்கிகளை சரக்கு ரயில் மூலமாக ரேவாரியில் இருந்து புலேரா வரை கொண்டு சென்று சோதனை நடத்தப்பட்டது.
இந்த பிரத்யேக சரக்கு போக்குவரத்து பாதைகள் மூலமாக படை நகர்த்தல்களை அதிக வேகமாக சிக்கல்களின்றி நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை அந்த பிரத்தியேக பாதையை ராணுவம் பயன்படுத்தி கொள்வதற்கான முதலாவது படி என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.