நீரவ் மோடியின் கூட்டாளிக்கு இந்திய ஏஜென்சிகள் (ரா) வைத்த “ஹனி ட்ராப்” தேன் பொறி !!

  • Tamil Defense
  • June 1, 2021
  • Comments Off on நீரவ் மோடியின் கூட்டாளிக்கு இந்திய ஏஜென்சிகள் (ரா) வைத்த “ஹனி ட்ராப்” தேன் பொறி !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு நைசாக நழுவிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தனர்.

இதில் நீரவ் மோடி லன்டனில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா கொண்டு வருவதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது, இங்கிலாந்து நீதிமன்றத்தில் தன்னை இந்தியா அனுப்பக்கூடாது என அவர் வாதாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதை போல மெகுல் சோக்ஸி இனடர்போல் மூலமாக இந்தியாவால் தேடப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் ஆண்டிகுவா நாட்டில் இருந்து சட்டவிரோதமாக டோமினிசியா நாட்டில் நுழைந்ததாக அங்கிருந்து கியூபா செல்ல முயன்ற போது டோமினிசியா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டான்.

இதனை தொடர்ந்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன், அதாவது இந்திய ஏஜென்சிகள் நடத்திய ஆபரேஷனில் தான் மெகுல் சோக்ஸி சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது அவருடன் இருந்த ஒர் இளம்பென் அவரை தனது வீட்டிற்கு அழைத்ததாகவும் அதனையடுத்து அங்கு சென்ற மெகுல் சோக்ஸி கடத்தபட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

டோமினிசியா காவல்துறை மெகுல் சோக்ஸியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்னர் சிறையில் அடைத்துள்ளது, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன, அவற்றில் மெகுல் சோக்ஸியின் இடது கண், கைகளில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தெள்ள தெளிவாக தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக மெகுல் சோக்ஸி டோமினிசியா நீதிமன்றத்தில் ஆண்டிகுவாவில் இருந்து தன்னை இந்தியா மற்றும் ஆண்டிகுவாவை சேர்ந்த மர்ம நபர்கள் டோமினிசியாவுக்கு கடத்தி அடித்து துன்புறுத்தியதாகவும் தன்னை இந்தியாவுக்கு அனுப்ப கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்தியாவில் சுருட்டிய பணத்தை கொண்டு “ஆண்டிகுவா நாட்டில் முதலீடு செய்து குடியுரிமை பெறும் திட்டத்தின்” கீழ் மெகுல் சோக்ஸி பெற்றுள்ள குடியுரிமையை ரத்து செய்வதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

அந்நாட்டு பிரதமர் கேட்ஸன் ப்ரவுன் கூறும்போது உலகளாவிய ரீதியில் இதுபோன்ற கிரிமினல்களை ஒன்றினைந்து ஒடுக்க வேண்டும் எனவும் டோமினிசியா மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இந்தியா ஒரு தனி விமானத்தை மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு கொண்டு வர ஆண்டிகுவாவுக்கு அனுப்பி இருப்பதையும் கேட்ஸன் ப்ரவுன் உறுதிபடுத்தி உள்ளார்.

ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்க துறையின் குற்றப்பட்டியலில் இருந்த மெகுல் சோக்ஸிக்கு நமது “ரா” பொறி வைத்ததா என்ற கேள்வி தற்போது பரவலாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.