
ஆப்கன் படைகள் பின்வாங்குவதாலும் இனி அவர்களுக்கு அமெரிக்காவின் உதவி கிடைக்காது என்பதனாலும் இனி ஆப்கன் மொத்தத்தையும் எளிதாக கைப்பற்றி அங்கு இஸ்லாமிய ஆட்சியை விரைவில் அமல்படுத்துவோம் என தாலிபன் கமாண்டர்கள் கூறியுள்ளனர்.
தாலிபன்களுக்கும் ஆப்கன் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் நேரத்தில் கடந்த மே மாதம் அமெரிக்க துருப்புகள் வெளியேறுவதாக கூறப்பட்டதற்கு பிறகு தற்போத வரை தாலிபன்கள் கிட்டத்தட்ட 30 மாவட்டங்கள் வரை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கன் படைகளுக்கு கிடைக்க வேண்டிய சப்ளை லைன்கள் குறைந்தமையால் ஆப்கன் படைகள் பல தொலைதூர கிராமப்புற மாவட்டங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன.
அமெரிக்கா தாலிபன்களை இந்த பூமியில் இருந்தே அழித்துவிடலாம் என கனவு கண்டுகொண்டிருந்தனர் என முல்லா மிஸ்பா என்ற தாலிபன் கமாண்டர் கூறியுள்ளார்.ஆனால் தற்போது அமெரிக்கா வீழ்த்தப்பட்டுள்ளது மற்றும் இனி ஆப்கனில் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களில் மட்டும் காஸ்னி மாகாணத்தில் இரு மாவட்டங்களை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறும் பட்சத்தில் வெறும் ஐந்தே நாட்களில் ஆப்கன் கைப்பற்றப்படும் என முல்லா மிஸ்பா கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் வெளியேறிய பிறகு ஆப்கன் நகரங்களின் மீது நாடு தழுவிய தாக்குதல்கள் தாலிபன்கள் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.