புதிய இஸ்ரேலிய பிரதமர்; இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும் ??
1 min read

புதிய இஸ்ரேலிய பிரதமர்; இந்தியாவுடனான உறவு எப்படி இருக்கும் ??

கடந்த 13ஆம் தேதி இஸ்ரேலின் 13ஆவது பிரதமராக திரு.நஃப்தலி பென்னட் பதவியேற்றார், இவர் இஸ்ரேலிய சிறப்பு படையில் மேஜராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்கள் அடுத்த வருடம் இந்திய இஸ்ரேலிய உறவுகளின் 30 வருட விழாவை கொண்டாட உள்ள நிலையில் உங்களை சந்தித்து உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

நஃப்தலி பென்னட் சார்பில் பதிலுக்கு இந்தியாவுடனான உறவை மேலும் மேலும் வலுப்படுத்த விரும்புவதாக பதில் பதிவு இடப்பட்டு உள்ளது.

மேலும் நஃப்தலி பென்னட் தீவிர பயங்கரவாத எதிர்ப்பாளர் எனவும் முன்னாள் பிரதமர் நேதன்யாகுவை விடவும் தீவிரமானவர் எனவும் கூறப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத ஒழிப்பு போன்றவற்றில் இந்தியாவுக்கு நஃப்தலி பென்னட் தலைமையிலான இஸ்ரேல் அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.