அக்டோபரில் விசாகப்பட்டினம், மே மாதம் வேலா இந்திய கடற்படைக்கு டெலிவரி !!

  • Tamil Defense
  • June 15, 2021
  • Comments Off on அக்டோபரில் விசாகப்பட்டினம், மே மாதம் வேலா இந்திய கடற்படைக்கு டெலிவரி !!

இந்திய கடற்படை தற்போது நவீனப்படுத்துதல் பணிகளில் அதிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது, பல்வேறு முன்னனி கப்பல்களை படையில் இணைத்தும் வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த வருடம் அக்டோபர் மாதம் முதலாவது விசாகப்பட்டினம் ரக நாசகாரி கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் மும்பை மஸகான் கப்பல் கட்டும் தளத்தில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

மேலும் அதே ரகத்தை சேர்ந்த மர்மகோவா, இம்பால் மற்றும் போர்பந்தர் ஆகிய இதர மூன்று நாசகாரி கப்பல்களும் பல்வேறு கட்ட கட்டுமான நிலைகளில் உள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதை போல நான்காவது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வேலா இந்த நிதியாணடு முடிவடையும் முன்பு அதாவது அடுத்த மார்ச் வாக்கில் டெலிவரி செய்யப்பட உள்ளது.

ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களும் மும்பையில் அமைந்துள்ள மஸகான் கப்பல் கட்டுமான தளத்தில் தான் கட்டமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.