ஐரோப்பா ஆஃப்ரிக்காவில் பயிற்சி முன்னனி இந்திய போர்க்கப்பல் பங்கேற்பு !!

ஐரோப்பா மற்றும் ஆஃப்பரிக்காவில் நடைபெறும் கடற்படை போர் பயிற்சியில இந்திய கடற்படையின் முன்னனி போரக்கப்பல் ஒன்று பங்கேற்க உள்ளது.

ஐ.என்.எஸ். தாபர் என்ற அந்த கப்பல் இங்கிலாந்து கடற்படையுடன் கொங்கன், ஃபிரெஞ்சு கடற்படையுடன் வருணா, ரஷ்ய கடற்படையுடன் இந்திரா போன்ற முக்கிய போர் பயிற்சிகளில் கலந்து கொள்ள உள்ளது.

இது தவிர ரஷ்ய கடற்படை தின கொண்டாட்டங்களிலும் இந்த கப்பல் பங்கு பெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எகிப்து, ஜிபூட்டி, இத்தாலி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா, நெதர்லாந்து, மொராக்கோ, சுவீடன் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது என கூறப்படுகிறது.

இந்த மாதம் 13 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய தாபர் வருகிற செப்டம்பர் மாதம் இறுதிவரை அதன் பயணத்தை தொடரும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.