
இரஷ்ய போர்க்கப்பல் பாதுகாப்புடன் இந்தியாவின் ஒரே அணுசக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சக்ரா மலாக்மா நீரிணை வழியே செல்வதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இரஷ்யாவிடம் இருந்து இந்த நீர்மூழ்கி இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.2022ல் நீர்மூழ்கி குத்தகை காலம் முடிவடைவதால் சக்ரா இரஷ்யா திரும்புவதாக என்டிடிவி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
இரஷ்யாவின் பெரிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான அட்மிரல் ட்ரிபுட்ஸ் கப்பல் உதவியுடன் செல்லும் ஐஎன்எஸ் சக்ரா மலாக்கா நீரிணை வழியாக போவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த கப்பல் இரஷ்யாவின் பசிபிக் துறைமுகமான விலாடிவோஸ்டோக் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சக்ரா நீர்மூழ்கிக்கு மாற்றாக இதைவிட அதிநவீன நீர்மூழ்கி இந்திய கடற்படையில் இணையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது 2025 வரை இந்திய கடற்படையில் அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கிகள் இருக்காது.2025க்கு பிறகே இரஷ்யாவிடம் இருந்து புதிய அணுசக்தி தாக்கும் நீர்மூழ்கி பெறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.