முதல் மூன்று அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் 95% உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் !!

  • Tamil Defense
  • June 14, 2021
  • Comments Off on முதல் மூன்று அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிகள் 95% உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் !!

இந்திய கடற்படை சுமார் 50,000 கோடி ரூபாய் செலவில் 6 அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிகளை கட்டி படையில் இணைக்க விரும்புகிறது.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இவற்றின் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முதல்கட்டமாக மூன்று நீர்மூழ்கிகளை கட்டமைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி பெற்று பணிகளை துவங்கும் எனவும்,

முதல் மூன்று நீர்மூழ்கி கப்பல்களின செயல்பாட்டை வைத்து அடுத்த மூன்று நீர்மூழ்கி கப்பல்களும் கட்டமைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த திட்டத்தின் மிக முக்கியமான அம்சமே உள்நாட்டு தயாரிப்பாகும், இஙாகேயே கட்டமைக்கப்படும் இவற்றில் சுமார் 95% அளவுக்கு நமது நாட்டின் தொழில்நுட்பம் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.