Breaking News

ராணுவத்தை முழுவதும் இந்திய மயமாக்கும் பணிகள் துவக்கம், பண்டைய சோழர்கள் உட்பட அரசர்களின் வியூகங்களை பாடமாக்க திட்டம் !!

  • Tamil Defense
  • June 8, 2021
  • Comments Off on ராணுவத்தை முழுவதும் இந்திய மயமாக்கும் பணிகள் துவக்கம், பண்டைய சோழர்கள் உட்பட அரசர்களின் வியூகங்களை பாடமாக்க திட்டம் !!

மிக நீண்ட காலமாகவே இந்திய பாதுகாப்பு படைகள் பிரிட்டிஷ் பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றன, தங்களது பேன்ட் வாத்தியங்கள், அணிவகுப்பு என பல்வேறு இடங்களில் இது வெளிப்படும்.

உதாரணமாக அணிவகுப்பு விழாக்களின் போது இசைக்கப்படும் பல பாடல்கள் பிரிட்டிஷ் பாரம்பரிய பாடல்களாகும், அதை போல அதிகாரிகள் உணவு முறைகள் பல ஆங்கிலேய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன.

இதை தவிர அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படுகையில் பிரிட்டிஷ் ஜெர்மானிய சோவியத் ஜெனரல்கள், அலெக்சாண்டர் நெப்போலியன் போன்ற பேரரசர்களின் வியூகங்கள் அதிகமாக பயிற்றுவிக்கப்படுகின்றன.

தற்போது இந்திய அரசர்கள் குறிப்பாக சோழ பேரரசர்களின் கடற்படை வியூகங்கள், மராட்டிய பேரரசர் சிவாஜியின் நுணுக்கங்கள், கவுதில்யா எழுதிய அர்தஷாஸ்தரா போன்ற நூல்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதை தவிர பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட சில பாராட்டுகளை விலக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி மேஜர் ஜெனரல் பிரேந்தர் தனோவா பேசும் போது உலகம் முழுவதும் ராணுவங்கள் நவீன போர்முறை மற்றும் சொந்த கலாச்சரங்களை இணைந்தே பின்பற்றி வருகின்றன, அதே நேரத்தில் இந்த மாற்றம் அரசியல் ரீதியான ஒன்றாக இருக்க கூடாது என கருத்து தெரிவித்தார்.