ஆயுத தொழிற்சாலை வாரிய சீர்திருத்தம் ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் !!

  • Tamil Defense
  • June 23, 2021
  • Comments Off on ஆயுத தொழிற்சாலை வாரிய சீர்திருத்தம் ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் !!

சமீபத்தில் மத்திய அரசு ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை சீரமைத்து கார்ப்பரேட் ஸ்டைலில் மாற்றியமைக்க அனுமதி அளித்தது.

இதனையடுத்து தற்போது ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய தொழிற்சங்க அமைப்புகள் கூட்டாக போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.

இதுபற்றி அந்த அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஜூலை 1 போராட்ட அறிவிப்பு வெளியாகும் எனவும் ஜூலை 19 முதல் போராட்டம் நடைபெறும எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் பங்கு பெறும் தொழிற்சங்கங்களாவன கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய பாதுகாப்பு தொழிலாளர்கள் சம்மளேனம, ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவான பாரதிய ப்ரதிரக்ஷா மஸ்தூர் சங்கம் மற்றும் காங்கிரஸின் அகில இந்திய பாதுகாப்பு பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவை ஆகும்.

அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டள்ளது பலரின் புருவங்களை உயர்த்தி உள்ளது.