1700 புதிய டேங்குகள் வாங்க இந்தியா திட்டம்

  • Tamil Defense
  • June 10, 2021
  • Comments Off on 1700 புதிய டேங்குகள் வாங்க இந்தியா திட்டம்

எதிர்காலத்திற்கும் ஏற்ற டேங்குகளை இந்தியா தொகுதி தொகுதியாக பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 1700 டேங்குகள் 2030வரை படையில் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1770 டேங்குகள் தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் பெறப்படும்.இந்திய இராணுவத்திற்கு இந்த எதிர்கால சூப்பர் டேங்குகளை வழங்க விருப்பமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 15க்குள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த டேங்குகள் தவிர ஏற்கனவே இராணுவம் 118 அர்ஜீன் மார்க்-1ஏ டேங்குகளை சுமார் 8330 கோடிகளுக்கு ஆர்டர் செய்துள்ளது.இது தவிர லடாக் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு ஏற்ற இலகு ரக டேங்கும் இந்தியா பெற உள்ளது.இந்த ரகத்தில் சுமார் 350 டேங்குகள் வரை படையில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது இரஷ்யத் தயாரிப்பு டி-90 மற்றும் டி-72 லக டேங்குகளை இயக்கி வருகிறது.