MH-60 ரோமியோ ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இந்திய குழு !!

  • Tamil Defense
  • June 23, 2021
  • Comments Off on MH-60 ரோமியோ ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அமெரிக்கா சென்ற இந்திய குழு !!

இந்திய கடற்படையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழு ஒன்று விரைவில் படையில் இணைக்கப்பட உள்ள MH-60 Romeo ரோமியோ ஹெலிகாப்டர்களில் பயிற்சி பெற அமெரிக்கா சென்றுள்ளது.

அடுத்த மாதம் முதல் மூன்று ரோமியோ ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு அமெரிக்காவில் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் பின்னர் 2022ஆம் ஆண்டு அவை இந்தியா வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க கடற்படை இந்திய குழு பென்சிகோலா கடற்படை விமான தளத்தை வந்தடைந்துள்ளதாக கூறியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு சுமார் 2.13 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 24 MH-60 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்ததும் அவை 2025 முடிவில் டெலிவரி ஆகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.