ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தின் கார்ப்பரேட் நிர்வாக திட்டம் ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • June 21, 2021
  • Comments Off on ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தின் கார்ப்பரேட் நிர்வாக திட்டம் ஒரு பார்வை !!

சமீபத்தில் மத்திய அரசு மிக நீண்ட காலமாக பல அரசுகள் செய்ய முயற்சித்த ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தின் கார்ப்பரேட் நிர்வாக மயமாக்கலுக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இந்த பணிகளை இந்த ஆண்டு முடிவிற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டு அதற்காக உயர்மட்ட குழு ஒன்றையும் அமைத்து உள்ளது, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் சதிஷ் கங்வார் இந்த குழுவில் உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி கம்பனிகள் சட்டம் 2013ன் கீழ் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் முழுக்க முழுக்க அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிர்வாக அமைப்பு கொண்ட நிறுவனமாக உருமாற்றம் செய்யப்படும் எனவும் இதற்காக KPMG நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

மேலும் தற்போது 41 பணிமனைகள், 9 பயிற்சி மையங்கள், 5 தர கட்டுபாட்டு மையங்கள் மற்றும் 3 மார்க்கெட்டி மையங்கள் கொண்ட ஆயுத தொழிற்சாலை வாரியம் சுமார் 81,500 பணியாளர்களுடன் இயங்கி வருகிறது.

இதில் தொழிலாளர்கள் பாதுகாப்புடன காரப்பரேட் ஸ்டைல் நிர்வாகம் அறிமுகபடுத்தப்பட உள்ளது, மேலும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தில் இனி 7 பிரிவுகள் இருக்கும் அவையாவன,

1) தோட்டாக்கள் மற்றும் வெடி பொருட்கள் பிரிவு,
2) வாகனங்கள் பிரிவு,
3) தளவாடங்கள் மற்றும் கருவிகள் பிரிவு,
4) ஆப்டோ எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு,
5) பாராசூட் பிரிவு,
6) வீரர்கள் வசதி பிரிவு,
7) ஆன்சில்லரி பிரிவு ஆகியவை அடங்கும்.

அதிக விலை, கால தாமதம், தர பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 20 வருடங்கள் முன்னரே இது பரிந்துரைக்கப்பட்டது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசும் இத்தகைய முயற்சிகளை எடுத்தது குறிப்பிடத்தக்கது.