அணுசக்தி விமானம்தாங்கி கப்பலுடன் இந்திய படைகள் மாபெரும் போர்பயிற்சி

  • Tamil Defense
  • June 23, 2021
  • Comments Off on அணுசக்தி விமானம்தாங்கி கப்பலுடன் இந்திய படைகள் மாபெரும் போர்பயிற்சி

ஜீன் 23 மற்றும் 24 தேதிகளில் அமெரிக்காவின் அணுசக்தி விமானந்தாங்கி கப்பலுடன் இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை இணைந்து போர்பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளது.இந்திய கடற்படையின் ஐஎன்என் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் தெக் போர்க்கப்பல்களுடன் மிக்-29கே மற்றும் P8I விமானங்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன.

அமெரிக்காவின் நிமிட்ஸ் ரக விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ரோனால்ட் ரீகன் உடன் ஆர்லே புர்க் ரக டெஸ்ட்ராயர் USS Halsey மற்றும் டைகோன்டெரோக ரக வழிகாட்டு ஏவுகணை க்ரூசர் ரக கப்பலான USS Shiloh ஆகியவை இந்த போர்பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளன.

இந்திய விமானப்படையும் இந்த போர்பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது.ஜாகுவார் மற்றும் சுகாய்-30எம்கேஐ விமானங்களுடன் அவாக்ஸ் ரக விமானங்கள் மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை பங்கேற்க உள்ளன.

ஜாகுவார் விமானங்கள்

அமெரிக்கா சார்பில் F/A-18 விமானங்கள் மற்றும் E-2C Hawkeye விமானங்களும் பங்கேற்க உள்ளது.இந்த பயிற்சி திருவனந்தபுர கடலோர பகுதியில் நடைபெற உள்ளது.