அமெரிக்கா தனது இருபது வருட இராணுவச் செயல்பாட்டை ஆப்கனில் முடித்துள்ளது.அதன் இராணவம் இன்னும் சில நாட்களில் முழுதாக ஆப்கனில் இருந்து வெளியாக உள்ளது.இதனை அடுத்து ஆப்கனில் பெரும் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்திய டிப்ளமேட்டுகளுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தாலிபன்கள் கூறியுள்ளனர்.
ஆப்கனில் தற்போது அரசுப் படைகள் தோல்விகளை தழுவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது தாலிபன்கள் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கத்தாரில் உள்ள தாலிபன்களின் அரசியல் பிரிவு தற்போது உலக அரசுகளுடன் பேச தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் தாங்கள் தான் அடுத்த ஆப்கன் அரசை அமைக்க உள்ளதாகவும் கூறி வருகிறது.