கடலோர காவல்படைக்கு மாசு கட்டுப்பாட்டு கலன்கள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • June 25, 2021
  • Comments Off on கடலோர காவல்படைக்கு மாசு கட்டுப்பாட்டு கலன்கள் வாங்க ஒப்பந்தம் !!

இந்திய கடலோர காவல்படைக்கு தேவையான 2 மாசு கட்டுபாட்டு கலன்ஙளை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கோவா கப்பல் கட்டுமான தளத்துடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது சுமார் 583 கோடி ரூபாய் என பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு கப்பல்களையும் முறையே நவம்பர் 2024 மற்றும் மே 2025 ஆகிய காலகட்டங்களில் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதி ஆகும்.

இந்த கலன்கள் எண்ணெய் படலத்தை சுத்திகரிப்பது, தீ அணைப்பது போன்ற பணிகளில் பயன்படுத்தி கொள்ளப்படும் இவற்றில் ஹெலிகாப்டர் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய கடலோர காவல்படையானது மூன்று மாசு கட்டுபாட்டு கலன்களை குஜராத் மாநிலம் போர்பந்தர், மஹாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கி வருவது கூடுதல் தகவல் ஆகும்.