
ஹால் நிறுவனம் தயாரித்துள்ள ALH Mk III வானூர்தி கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளது.மூன்று வானூர்திகள் முதற்கட்டமாக படையில் இணைந்துள்ளன.
கடலோர காவல் படையில் வெவ்வேறு ஏவியேசன் ஸ்குவாட்ரான்களில் இந்த வானூர்திகள் இணைக்கப்பட்டு புவனேஷ்வர்,போர்பந்தர்,சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் நிறுத்தப்பட உள்ளது.
கடலோர காவல் படையின் கண்காணிப்பு பணிகளுக்கு இந்த வானூர்திகள் மிக உபயோகமானதாக இருக்கும்.இந்த வானூர்தியில் அதிநவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கண்காணிப்பு ரேடார்,எலக்ட்ரோ ஆப்டிக் Pod தவிர ஒரு இயந்திர துப்பாக்கியும் பொருத்தப்பட்டுள்ளதாக ஹால் நிறுவனம் கூறியுள்ளது.