
அடுத்த வாரம் இந்திய ராணுவத்தின் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்த உள்ளது அப்போது சீன எல்லை நிலவரம் குறித்தும் படைகளின் தயார்நிலை குறித்தும் பேசப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 16 ஆம் தேதி துவங்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து பிராந்திய தளபதிகளும் கலந்து கொள்ள உள்ளதாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.
தொடர்ந்து தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் இதர தளபதிகள் தயார் நிலை குறித்து நேரடியாக ஆய்வு செய்து வருவதையும் நாம் அவ்வப்போது காண முடிகிறது.
இந்த நிலையில் சில நாட்கள் முன்னர் எல்லையோரம் சீன ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டதும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்திய தரைப்படை சுமார் 50,000 வீரர்கள் டாங்கிகள் பிரங்கிகள் போர் விமானங்கள் ஆகியவற்றை எல்லையோரம் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.