
நாட்டின் எல்லையை காப்பது மட்டுமின்றி இந்திய ராணுவம் மிக நீண்ட காலமாக நாட்டிற்கு விளையாட்டு போட்டிள் வாயிலாகவும் பெருமை சேர்த்து வருகிறது.
அந்த வகையில் வருகிற டோக்யோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் கலந்து கொண்டு முத்திரை பதிக்க காத்திருக்கிறார்கள்.
அமித் பங்கால், மணிஷ் கவுசிக், சதீஷ் குமார் ஆகியோர் குத்துச்சண்டையிலும், அவினாஷ் சேபல், நீரஜ் சோப்ரா ஆகியோர் தடகள போட்டியிலும்,
அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோர் ரோவிங் போட்டியிலும், விஷ்ணு சரவணன் பாய்மர படகு செலுத்தும் போட்டியிலும், ப்ரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் ஆகியோர் அம்பு ஏவுதல் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர்.