இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இணைந்து கூட்டுபயிற்சி !!

இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து கூட்டு பயிற்சி ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் இப்பயிற்சியில் பாராசூட் மூலமாக வீரர்கள் மற்றும் இதர தளவாடங்கள் C130J மற்றும் AN32 போன்ற விமானங்களில் இருந்து களமிறக்கப்பட்டன.

மேலும் ராணுவ அதிகாரிகள் கவசப்படையினர் பங்கு பெற்ற 72 மணி நேர அதிதீவிர பயிற்சிகளையும் மேற்பார்வையிட்டனர்.

இந்த கூட்டு பயிற்சியின் மூலமாக இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இடையேயான ஒருங்கிணைந்த செயல்பாட்டு திறன் பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.