
இந்திய கடற்படை தனது வரலாற்றில் முதல் முறையாக ஐரோப்பிய கடற்படை அணி ஒன்றுடன் இணைந்து கூட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த கூட்டு பயிற்சிகளில் இந்தியாவுடன் ஃபிரான்ஸ் இத்தாலி ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சிகளை ஏடன் வளைகுடா பகுதியில் மேற்கொள்கின்றன.
இந்த இரண்டு நாள் பயிற்சிகளில் இந்தியா சார்பில் ஐ.என்.எஸ் த்ரிகாந்த் மற்றும் நான்கு ஐரோப்பிய போர்க்கப்பல்கள் கலந்து கொள்கின்றன.
பயிற்சிகளின் போது வான் பாதுகாப்பு, நீர்மூழ்கி எதிர்ப்பு, தேடுதல் மற்றும் மீட்பு, சப்ளை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையான முக்கிய பயிற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.