விமானப்படை வரலாற்று சிறப்புமிக்க உருமாற்றத்தை பெற்று வருகிறது: விமானப்படை தளபதி !!

இந்திய விமானப்படை தளபதி நேற்று ஆந்திர மாநிலம் டுன்டிகல் பகுதியில் அமைந்துள்ள விமானப்படை அகாடமியில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டு பேசினார்.

அப்போது இந்திய விமானப்படை வரலாற்று சிறப்புமிக்க உருமாற்றத்தை அடைந்து வருவதாகவும் அதற்கேற்ப பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தளவாடங்கள் படையில் இணைக்கப்பட்டு வருவதாகவும்,

இதற்கு மாறி வரும் போர் முறைகளும், உலகளாவிய அளவில் நிலவும் ஸ்திரத்தன்மை அற்ற புவிசார் அரசியல் சூழல்களும் அதையோட்டிய எல்லை பிரச்சினைகளும் காரணம் என்றார்.

கடந்த சில பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் வான் சக்தி பல்வேறு சூழல்களில் தனது முக்கியத்துவத்தை உணர்த்தி உள்ளதாகவும் அதனை உணர்ந்து இந்திய விமானப்படை செயல்படுவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.