ஏர் இந்தியாவிடம் இருந்து பழைய A320 விமானங்களை பெற உள்ள இந்திய விமானப்படை எதற்காக ?

  • Tamil Defense
  • June 24, 2021
  • Comments Off on ஏர் இந்தியாவிடம் இருந்து பழைய A320 விமானங்களை பெற உள்ள இந்திய விமானப்படை எதற்காக ?

இந்திய விமானப்படை தனது அவாக்ஸ் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெருமுயற்சி எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியாவிடம் இருந்த முன்னாள் A320-200 விமானங்களை பெற்று அதை அவாக்ஸ் விமானங்களாக மாற்ற உள்ளது.இது தவிர E145 விமானத்தை அடிப்படையாக கொண்ட மேலதிக விமானங்களும் பெற உள்ளது.

கடந்த 2020 டிசம்பரில் ஏர்இந்தியாவிடம் இருந்து ஆறு விமானங்கள் பெற்று அதை அவாக்ஸ் விமானங்களாக மாற்ற உள்ளதாக டிஆர்டிஓ கூறியது.அச்சமயத்தில் இந்த திட்டத்திற்கு USD1.4 billion டாலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டது.தற்போது ஆறு மாதங்கள் கழிந்தும் திட்டம் முன்னே போகாமல் உள்ளது.

இந்த ஆறு விமானங்கள் படையில் இணைத்தாலும் இந்திய விமானப்படைக்கு மேலதிக அவாக்ஸ் விமானங்கள் தேவைப்படும் என தளபதி பதாரியா அவர்கள் கூறயுள்ளார்.

பறக்கும் ரேடார்கள் எனப்படும் இந்த விமானங்கள் நவீனக்கால மின்னனு போர்முறைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.தற்போது ஏர் இந்தியாவிடம் 19 A320-200 விமானங்கள் உள்ளன.