புதிய ஸ்பைஸ்-250 குண்டுகளை வாங்க உள்ளதா இந்திய விமானப்படை ?

  • Tamil Defense
  • June 26, 2021
  • Comments Off on புதிய ஸ்பைஸ்-250 குண்டுகளை வாங்க உள்ளதா இந்திய விமானப்படை ?

இஸ்ரேலின் Rafael advanced defense system தான் ஸ்பைஸ் குண்டுகளை மேம்படுத்தி தாயரித்து வருகிறது.இந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் தனது புதிய டர்போஜெட் என்ஜின் கொண்ட வான்-தரை தாக்கும் குண்டுகளை ரபேல் நிறுவனம் காட்சிபடுத்தியிருந்தது.மேலும் இந்த புதிய குண்டுகளை இந்திய விமானப்படைக்கு வழங்கவும் தயாராக உள்ளது.

Spice 250 ER எனப்படும் இந்த புதிய ரகத்தில் சிறிய டர்போஜெட் என்ஜின் மற்றும் JP-8/10 Fuel system உள்ளது.இதன் உதவியுடன் இந்த குண்டு 150கிமீ வரை சென்று தாக்கும்.இலக்குகளை கண்டறியும் திறனை மேம்படுத்தும் பொருட்டு இந்த குண்டில் Advanced artificial intelligent திறன் உள்ளது.

இந்த குண்டுகளை பெற இந்திய விமானப்படை ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த குண்டு குறித்து மேலதிக தகவலை விமானப்படை அந்நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விமானப்படையில் உள்ள மிராஜ்-2000, சுகாய் 30 மற்றும் தேஜஸ் விமானங்களில் இந்த குண்டுகளை இணைத்து செயல்படுத்த முடியும்.