குறையும் கொரானா தொற்று; போர்க்குதிரையாய் செயல்பட்ட இந்திய விமானப்படை

  • Tamil Defense
  • June 10, 2021
  • Comments Off on குறையும் கொரானா தொற்று; போர்க்குதிரையாய் செயல்பட்ட இந்திய விமானப்படை

தற்போது இந்தியா முழுதும் கொரானா தொற்று கணிசமான அளவு குறைந்து வருகிறது.இதற்கு இந்திய விமானப்படையின் பங்கும் இன்றியமையாதது ஆகும்.

கொரானா இரண்டாவது அலை மிக தீவிரமாக தொடங்கிய போது ஏப்ரல் 16 அன்று தனது செயல்பாட்டை தொடங்கியது இந்திய விமானப்படை.நாடே வீட்டில் முடங்கிய போது விமானப்படை வீரர்கள் தங்களையும் பாதுகாப்பாய் வைத்து கொண்டு நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக பறக்க தயாராயினர்.

இந்த கொரானா காலத்தில் மட்டும் இந்திய விமானப்படை 3600 மணி நேரங்கள் பறந்துள்ளது.1800 முறை விமானங்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு பறந்துள்ளது.

ஆக்சிஜன் கண்டெய்னர்கள், ஆக்சிஜன் டேங்கர்கள்,சிலிண்டர்கள் மற்றும் செறிவூட்டிகள் மற்றும் மற்ற மருத்துவ உபகரணங்கள் என 14900 மெட்ரிக் டன்கள் உதவிப்பொருள்களை உள்நாடுகளுக்கும் வெளிநாடுகளில் இருந்தும் இடமாற்றம் செய்து இந்தியா மீண்டும் சுவாசிக்க உதவியுள்ளது விமானப்படை.இதற்காக 42 போக்குவரத்து விமானங்கள் மற்றும் வானூர்திகளும் களமிறக்கப்பட்டன.